காசே தான் கடவுளடா
நான் இங்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்குரிய தலைப்பை எடுக்கப்போவதில்லை.
கோவில் என்று சொன்ன மாத்திரத்தில் அவர் அவர் வயதிற்கு ஏற்ப கோவிலை பற்றிய அபிப்பிராயம் இருக்கும் என்பதுமறுக்க முடியாத உண்மை.
கோவில் என்று சொன்னவுடன் போதுவாக நம் கண்களுக்கு புலப்படுவது வானத்தை நோக்கி நிற்கும் கோபுரம், ஒரேசீராக செய்யப்பட்ட கலசங்கள், முனிவர்கள், கடவுள்கள் , தேவதைகள் பொன்ற பலரின் சிற்பங்கள் பல வண்ணங்களில் கோபுரத்தின் நாலாபக்கமும் காட்சி தரும்.
கோவிலின் வாசலில் கம்பீரமாக நிற்கும் ஒலிக்கும் மணிகளுடன் கூடிய வாசற்கதவு. கோவிலின் உள்ளே நுழைந்தால் அனைத்து பக்கமும் பல கடவுள்களின் ஒவியங்கள் கண்ணுக்கு காட்சி தரும்.
கொவிலின் உள்ளே கூட்டம் எல்லாம் கருவரையில் உள்ள மூல கடவுளை நோக்கியே பிரார்த்தனையில் இருப்பார்கள்.
"கடவுளின் பார்வையில் அனைவரும் ஒன்றுதான்" என்ற சமூக சிந்தனை கருத்தை நாம் பல மக்கள் சேவை வாகனங்களில் பார்த்திருப்போம். மிகவும் சிறந்த சிந்தனை என்று நான் சொல்லுவேன்.
கோவிலில் நுழைந்தவுடன் ஒரு பாதுகாப்பு கூண்டுக்குள் பத்திரமாக ஒருவர் அமர்ந்திருக்க, அவரை நோக்கி ஒரு நீண்ட வரிசை வீற்றிருக்கும். ஒரு வேளை அவரும் கடவுளோ? இல்லை அவர் கடவுளை நெருங்க வழி கூறுபவர்
அவர் அமர்ந்திருக்கும் கூண்டுக்கு அருகே ஒரு கருப்பு பலகையில் வெள்ளை நிறத்தில் சில வார்த்தைகள் . என்னவென்று அருகே சேன்று பார்த்தால்
கட்டணம்
------------------------------------------------------------
அபிஷேகம் - ரூ க்க் /-
அர்ச்சனை - ரூ ச்ச் /-
சிறப்பு நுழைவு - ரூ ப்ப் /- தலைக்கு
அபிஷேக நுழைவு - ரூ த்த் /- தலைக்கு
அர்ச்சனை நுழைவு - ரூ க்க் /- தலைக்கு
சிறப்பு அர்ச்சனை - ரூ ச்ச் /-
என்ன இது, கடவுளை பார்க்க விலையா?
பணம் படைத்தவர்களுக்கு தான் கடவுளை நெருங்கவோ அர்ச்சனை செய்யவோ முடியுமா?
எளியோர்களுக்கு கடவுளும் பணம் இருந்தால்தான் காட்சி அளிப்பாரா?
ஏன் இந்த அவல நிலை?
"கடவுளின் பார்வையில் அனைவரும் ஒன்று தான்" என்ற சமூக சிந்தனை கருத்தை நாம் பல மக்கள் சேவை வாகனங்கலில் பின்புறம் இருப்பதின் பயன் தான் என்ன?
இப்படி பல சிந்தனைகள் எனக்குள் ஓட நான் வியந்து நின்றிருக்க, என் பெற்றோர்கள் "டேய் சீக்கிரம் சிறப்பு அர்ச்சனை சீட்டும், அர்ச்சனை நுழைவு சீட்டும் வாங்கிவான்னு" சொன்னார்கள்.
நானும் அந்த நீள வரிசையில் நின்றேன் கூண்டில் உள்ள நபரை நோக்கி நெருங்க அரம்பித்தேன். எனக்குள் தொன்றிய சிந்தனை என்னை பொல எனக்கு முன் நிற்கும் பக்தர்களில் எத்தனை பேர் இப்படி சிந்தித்தும் இந்த வரிசையில் நிற்கிறார்களோ!!